தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

புதுவையில் தாய், தந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

புதுச்சேரி

புதுவை கொசப்பாளையம் சாத்தானி வீதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 36). தொழிலாளி. இவரது மனைவி யோகப்பிரியா (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்ரமணியின் தாய், தந்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சுப்ரமணி துக்கத்தில் இருந்தார். மேலும் அவர், தனது தாய், தந்தை சென்ற இடத்திற்கு செல்லப்போவதாக அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி கூறிவந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் சுப்ரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com