திண்டிவனத்தில் நாளை நடக்கிறது விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

Published on

செஞ்சி

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் திண்டிவனம் எல்.கே. டவரில் நாளை(வியாழக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com