இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை ஒதுக்காதீங்க..

நார்ச்சத்து நிறைந்த, கீரை மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
Published on

மனித உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எளிமையான பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியான உணவுகளை உண்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் வருமாறு:-

* அரிசி வகைகளில் சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகச் சம்பா, கொத்தமல்லி சம்பா, கைக்குத்தல் அரிசிகளை உணவில் சேர்ப்பது நல்லது.

* மீன்களில் மத்தி, சாளை, டூனா, விளமீன், குழம்புகள் சிறந்தது. மீன்களை பொரித்து உண்ணக் கூடாது.

* காய்கறிகளில், பீன்ஸ், அவரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, கொத்தவரங்காய், புடலங்காய், பாகற்காய், கோவைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், முட்டைகோஸ், பிராக்கோலி, நெல்லிக்காய், அறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, கரிசாலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, பாலாக் கீரை போன்ற நார்ச்சத்து நிறைந்த, கீரை-காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* பழங்களில், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பிளம்ஸ், பீச், பேரிக்காய், பன்னீர்த் திராட்சை, பப்பாளிப் பழம், வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Also Read
சர்க்கரை நோயாளிகள் வெயில் காலத்தில் பின்பற்ற வேண்டியவை..!
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

* நட்ஸ் வகைகளில், வால்நட், பாதாம், முளைகட்டிய அல்லது வேகவைத்த வேர்க்கடலை, பாசிப் பயறு, பச்சைப் பட்டாணி, கொள்ளு இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தீட்டிய வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு, மற்றும் எண்ணெய் இவைகளை அளவுடன் சேர்த்தால் வாழ்வு நலமாகும்.

- டாக்டர் மானெக் ஷா

Also Read
வாயுத் தொல்லையை விரட்டும் சித்த மருத்துவம்!
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com