கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Published on

கொடைக்கானல்:

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் லேசான சாரல் மழையே பெய்தது. இந்தநிலையில் நேற்று நண்பகல் 11 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இதற்கிடைய சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. மேலும் கனமழை கொட்டித்தீர்த்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நகரின் பிற பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த மழையை தொடர்ந்து நகரில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com