புதுவையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

புதுவையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
புதுவையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
Published on

புதுச்சேரி

புதுவையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

புதுவையில் கடந்த சில நாட்களாக வெளியில் வாட்டி வதைத்து வந்தது. இன்றும் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மாலை நேரத்தில் வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டன. பின்னர் இரவு 8 அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை கொண்டே இருந்தது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் குடைபிடித்தபடியும், மழையின் நனைந்தபடியும் வீடு திரும்பினர்.

தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மின்கம்பம் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. உடனடியாக மின்ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அதனை சரி செய்தனர்.

முறிந்து விழுந்த மரங்கள்

திருபுவனை பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த தேக்கமரம் சாய்ந்து மின்கம்பத்தில் விழுந்தது.

சன்னியாசிகுப்பம் இந்திராநகர் பகுதியில் பனைமரம் சாய்ந்து 3 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் திருபுவனை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின.

இதுகுறித்து அறிந்த மின்துறை உதவி பொறியாளர்கள் பேரம்பலம், இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர்கள் ராமலிங்கம், பச்சையப்பன் மின்ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் பாகூர், அரியாங்குப்பம், தவளக்குப்பம், திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com