

தோகைமலை,
தோகைமலையில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தோகைமலை ஊராட்சி மன்ற தலைவர் தனமாலினிகந்தசாமி, நர்சிங் கல்லூரி முதல்வர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்கள் எப்படி விபத்தில் சிக்கி கொள்கின்றனர், விபத்து நடப்பது எப்படி, விபத்தை தடுப்பது எப்படி, முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என செய்முறை விளக்கத்துடன் நடித்துக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், தமிழ்ச்சங்க செயலாளர் குணசேகரன், பொருளாளர் செந்தில்குமார், காந்தி காலம் நற்பணி மன்ற தலைவர் மாணிக்கம் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.