கரூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய அறிவுறுத்தல்

கலெக்டர் அலுவலகத்திற்குள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய அறிவுறுத்தப்பட்டது.
கரூர்
கரூர்
Published on

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு அரசு அலுவலகங்கள், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரேசன் கடையில் பொருட்கள் வழங்கப்படாது, பங்குகளில் பெட்ரோல் வழங்கப்படாது, மளிகை கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது, டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படாது என்பன உள்ளிட்ட எந்தவொரு சேவையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் ஹெல்மெட் அணியாமல் செல்ல அனுமதி இல்லை என நுழைவுவாயில் முன்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. மேலும் நுழைவுவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, ஹெல்மெட் அணிந்து வர அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com