இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோவிலில் நிலத்தை மீட்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

காரைக்கால்

காரைக்கால் கீழ காசாக்குடி பகுதியில் அரசு இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட பழமைவாய்ந்த ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பல்வேறு தரப்பினர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து காரைக்கால் மாவட்ட இந்து முன்னணியினர் மற்றும் ஆதிபுரீஸ்வரர் தேவஸ்தான சொத்து மீட்புக் குழு சார்பில் காரைக்கால் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.

நகர தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கோவில் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com