புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர்மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்க கடலில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10-ந் தேதி (நாளை), 11-ந் தேதியில் (நாளை மறுதினம்) சில இடங்களில் கன முதல் அதி கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10-ந் தேதி (நாளை), 11-ந் தேதி (நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com