வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருட்டு
வீடு புகுந்து நகை திருட்டு
Published on

காரைக்குடி

குன்றக்குடி போலீஸ் சரகம் பேயன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பாண்டிமீனாள். மாரிமுத்து துபாயில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பாண்டிமீனாளும் அவரது மாமியாரும் வீட்டை பூட்டி விட்டு மீன் வாங்க சென்று விட்டனர். மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவுகள் திறந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த பாண்டி மீனாள், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் காணவில்லை. இதுகுறித்து பாண்டிமீனாள் குன்றக்குடி போலீசில் புகார் செய்துள்ளார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com