திருவள்ளூர் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை திருட்டு

திருவள்ளூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுரி (வயது 41). நேற்று முன்தினம் இரவு கவுரி தன்னுடைய குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார்.
திருவள்ளூர் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை திருட்டு
Published on

கோடைகாலம் என்பதால் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய வீட்டின் வெளிப்புற கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்து தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்

தலையணையின் அருகில் வைத்திருந்த தங்கச்சங்கிலி, ஜிமிக்கி என 1 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கவுரி இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது

சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com