பாரதி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை வீரர்கள்

பாரதி பூங்காவில் ஊர்க்காவல்படை வீரர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பாரதி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை வீரர்கள்
Published on

புதுச்சேரி

பொதுமக்களுடனான நல்லுறவை பேணிக்காக்கவும், பொதுநல நோக்கத்தோடு செயல்படவும் காவல்துறையினரை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் அறிவுறுத்தி உள்ளார். மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பாரதி பூங்காவில் தூய்மைப்பணி மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.

அதன்படி ஊர்க்காவல் படை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, சந்திரசேகர் உள்பட 50 ஊர்க்காவல் படையினர் பாரதி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 150 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊர்க்காவல் படை வீரர்களின் இந்த பணியை பாரதி பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com