வீட்டுக்கடன் தவணையை குறைவாக செலுத்த மாற்று முறை

சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்.
வீட்டுக்கடன் தவணையை குறைவாக செலுத்த மாற்று முறை
Published on

வீட்டை கட்டி விட்டு அல்லது வாங்கிய வீட்டில் நிம்மதியாக அமர வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ள நிலையில் கடனுக்கான வட்டி விகிதம் பற்றிய வருங்கால கணக்கீடுகள் பலருக்கும் இருப்பதில்லை. காலப்போக்கில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் தவணை தவறும் சமயங்களில்தான் வட்டி விகிதம் பற்றி பலரும் யோசிப்பதாக நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நிலையில் மாதாந்திர தவணையை சற்று குறைவாக செலுத்த இயலுமா..? என்ற கேள்விக்கு அவர்கள் தரும் பேலன்ஸ் டிரான்ஸ்பர் (Balance Transfer) என்ற வழிமுறை பற்றிய செய்திகளை இங்கே பார்க்கலாம்.

வங்கி மாற்றம்

10 வருடங்களுக்கும் மேலான காலகட்டம் கொண்ட நீண்ட கால கடன்களுக்கு பொருத்தமாக குறிப்பிடப்படும் இந்த வழிமுறையின் மூலம் மீதமுள்ள வீட்டுக் கடனை குறைவான வட்டி விகிதமுள்ள வங்கிக்கு மாற்றிக்கொண்டு அந்த விகிதத்தின்படி மாதாந்திர தவணையை செலுத்தி வரலாம்.

அவசியமான ஆவனங்கள்

வீட்டுக் கடன் பெறுவதற்கு தரப்பட்ட அனைத்து ஆவணங்களும் இதற்கும் அவசியம் என்ற நிலையில், முந்தைய வங்கியிலிருந்து ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் பெற்று புதிய வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

மீதமுள்ள மதிப்புக்கு காசோலை

ஆவணங்கள் தக்க சோதனைகளுக்கு பின் புதிய வங்கியால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள கடன் தொகைக்கான மதிப்பு காசோலையாக முந்தைய வங்கிக்கு வழங்கப்படும். மேலும், முந்தைய வங்கி நடைமுறைகள் புதிய வங்கியிலும் பின்பற்றப்படும்.

ஆவணம் பதிவு

தவணை செலுத்தப்படும் சொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடன் கொடுத்த புதிய வங்கியின் பெயர், மற்றும் கடனுக்கான விபரங்கள் ஆகியவை ஆவணமாக பதிவு செய்யப்படும்.

நீண்ட கால ஆதாயம்

மேற்கண்ட முறை எல்லா நேரங்களிலும், அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மீதியுள்ள கடன் தொகை, வங்கிகளில் வசூலிக்கப்படும் போர்குளோசர் கட்டணம் என்ற அபராத கட்டணம், மற்றும் பிராசஸிங் கட்டணம் போன்றவற்றையும், மாறக்கூடிய வட்டி விகித வேறுபாடுகளையும் கணக்கிட வேண்டும். சில நிலைகளில் வீட்டை மறு மதிப்பீடு செய்யவேண்டியதாக இருக்கலாம். அதன் பின்னர் பேலன்ஸ் டிரான்ஸ்பர் என்பது மீதி செலுத்த வேண்டிய தவணைகளின் கணக்கீடு அடிப்படையில் ஆதாயம் தரக்கூடியது என்றால் இம்முறையை கடைப்பிடிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com