ஹோண்டா சி.பி.200 எக்ஸ்.

இருசக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட சி.பி. 200 எக்ஸ். மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா சி.பி.200 எக்ஸ்.
Published on

பாரத் புகைவிதி சோதனை-6 விதி முறைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில், எத்தகைய சாலைகளிலும் பயணிப்பதற்கேற்ப உறுதியான வடிவமைப்பு கொண்டது.

வண்ண கிராபிக் ஸ்டிக்கர்கள் வாகனத்திற்கு அழகு சேர்ப்பதோடு, டையமண்ட் வடிவிலான பிரேம், ஒருங்கிணைந்த லைட்டிங் சிஸ்டம் (முகப்பு விளக்கு, எல்.இ.டி. இன்டிகேட்டர், எக்ஸ் வடிவிலான பின்புற எல்.இ.டி. சிவப்பு விளக்கு), இருவர் பயணிக்கும் வகையிலான தனித்தனி இருக்கைகள் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். டிஸ்க் பிரேக், ஒருங்கிணைந்த ஏ.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. இதில் பிரத்யேகமாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளது. ஐந்து கியர்களைக் கொண்டது. இதில் ஸ்பீடா மீட்டர், ஓடோமீட்டர், டாக்கோமீட்டர், எரிபொருள் காட்டி, கியர் இன்டிகேட்டர் உள்ளிட்டவைகள் சூரிய வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரியும்.

இது 17 பி.ஹெச்.பி. திறனையும் 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். முன்புறம் யு.எஸ்.டி. ஷாக் அப்சார்பரும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.

சிவப்பு, கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.47 லட்சம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com