

காரைக்குடி,
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே ஆறாவயல் சண்முகநாதபுரம் வீர மகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் 35 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என 4 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தானாவயல் வெங்கடாச்சலம், 2-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் மற்றும் தேவகோட்டை பிரசாத் மொபைல்ஸ், 3-வது பரிசை தேவகோட்டை வீரசேகரன் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற நடுமாடு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொய்யாதநல்லூர் கபீப்முகமது, 2-வது பரிசை பெட்டிவயல் சுந்தரேசன் மற்றும் வெளிமுத்தி வாகினி, 3-வது பரிசை கம்பம் சுதர்சன் வண்டியும் பெற்றன.
சின்னமாடு
பின்னர் நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஆறாவயல் மெய்யப்பன், 2-வது பரிசை கல்லூரணி பாலாஜி, 3-வது பரிசை பேராட்டுக்கோட்டை மாயழகு வண்டியும் பெற்றன. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பரமந்தூர் குமார் , 2-வது பரிசை உஞ்சனை சரவணன், 3-வது பரிசை தேவகோட்டை ஷிபாகுட்டி மற்றும் காரைக்குடி கருப்பணன் வண்டியும் பெற்றன.
குதிரை வண்டி பந்தயம்
பின்னர் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய குதிரை வண்டி பந்தயம், சின்ன குதிரை வண்டி பந்தயம் என இருபிரிவாக நடை பெற்றது. முதலில் நடைபெற்ற பெரியகுதிரை வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருச்சி அருண் குதிரை வண்டியும், 2-வது பரிசை ஸ்ரீரங்கம் சேது வண்டியும், 3-வது பரிசை ஆறாவயல் தேனு வண்டியும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற சின்னகுதிரை வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருச்சி அருண், 2-வது பரிசை உறையூர் நம்பி உதயசூரியன், 3-வது பரிசை கண்டதேவி மருதுபிரதர்ஸ் குதிரையும் பெற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.