குவியலாக கிடந்த மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு

குவியலாக கிடந்த மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு ஏற்பட்டது
குவியலாக கிடந்த மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு
Published on

கே.கே.நகர

திருச்சி-மதுரை பைபாஸ் சாலை, எடமலைப்பட்டிபுதூர் பசுமை பூங்கா எதிரே உள்ள காலிமனையில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள முட்புதரில் தலை உள்பட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கிடந்ததை கண்டு அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர்,இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவே அவர்கள் எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த மண்டை ஓடுகள், எலும்புகள் முட்புதருக்கு வந்தது எப்படி?, வேறு இடத்தில் இருந்து இங்கு கொண்டு வந்து வீசப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com