கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது: 1.1 கிலோ பறிமுதல்

தாழையூத்து பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் ஒரு தனியார் பாலிடெக்னிக் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது: 1.1 கிலோ பறிமுதல்
Published on

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் ஒரு தனியார் பாலிடெக்னிக் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தாழையூத்தை சேர்ந்த கணவன், மனைவியான சீனிவாசன் (வயது 46), பேராட்சிசெல்வி(38) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், மேற்சொன்ன கணவன், மனைவி 2 பேரையும் தாழையூத்து காவல் நிலையம் அழைத்து சென்றார்.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2 பேரையும் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com