பெண் மீது தாக்குதல்; கணவர் கைது

குடும்ப தகராறில் பெண்ணை தாக்கியதாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.
பெண் மீது தாக்குதல்; கணவர் கைது
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள தெற்கு அரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி ஜூலியட் (வயது 40). சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், ஜூலியட்டை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜூலியட் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி, சசிகுமாரை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com