சண்டையை விலக்க முயன்ற பெண் கொலை வழக்கில் கணவர் கைது

சண்டையை விலக்க முயன்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
சண்டையை விலக்க முயன்ற பெண் கொலை வழக்கில் கணவர் கைது
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 55). இவரது மனைவி பவானி(45). இவர்களது மகன் வெங்கடேசன்(28). இவர் திருமணமாகி தனது மனைவியுடன் கிழக்குத்தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தைக்கும்- மகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். பவானி நடுவே நின்று 2 பேரையும் தடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது பவானி மேல் கத்திக்குத்து விழுந்ததில், அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது ரெங்கசாமி, தனது மகன் கல்லால் தனது தலையில் அடித்து விட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்து தன்னிடம் இருந்த கத்தியால் தன் மகனை மிரட்ட நினைத்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக சண்டையை தடுக்க வந்த தனது மனைவி பவானி கழுத்தில் கத்திபட்டு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மங்களமேடு பாலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com