என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி.. நடிகர் பரத்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்.
என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி.. நடிகர் பரத்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பால தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழு, திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் நடிகர் பரத் பேசியதாவது, இந்தப்படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இந்தப் படக்குழு என் குடும்ப நண்பர்கள் மாதிரி பழகினார்கள். ஆர்பி ஃபிலிம்ஸ் ஆர்பி.பாலா தயாரிப்பாளராக மாறிவிட்டார். மிக நல்ல இயக்குனர். அவருடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. ஆர்.பி.பாலா சாருக்கு நன்றி. பி.ஜி.முத்தையா சார் ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்துள்ளார் அவருக்கு நன்றி.

வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் மிகச்சிறந்த ஆக்டர். இப்படம் உங்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும் அனைவருக்கும் நன்றி என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com