

அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே எனது முகநூல் கணக்கை முடக்கி எனது படங்களை யாரோ மார்பிங் செய்தனர். அந்த படங்கள் வேகமாக வைரலானது. அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கலங்கினேன். சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் செய்தேன். சமூக வலைதளங்களில் கண்டித்து பதிவுகளும் வைத்தேன். அதன்பிறகு எனக்கு எதிராக வந்த பதிவுகள் எல்லாமே நின்றுவிட்டன.
எனக்கு அடிக்கடி ரசிகர்களிடமிருந்து நிறைய குறுந்தகவல்கள் வரும். நான் அவற்றை பார்ப்பது மட்டுமல்ல, எல்லாருக்கும் பதில் கூட கொடுப்பேன். அவர்கள் நேரத்தை எனக்காக செலவழித்து மெசேஜ் செய்கிறார்கள். நானும் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் குறுந்தகவல் அனுப்புவேன்.
இப்போது நான் உதவி இயக்குனர் தெரியுமா உங்களுக்கு? சில நாட்களுக்கு முன் மலையாளத்தில் மணியரயில் அசோகன் என்னும் படத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது எனக்கு அதில் முழுமையாக ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. சினிமாவில் உள்ள அனைத்து டெக்னிக்குகளையும் கற்றுக்கொண்டேன் என்றார்.