வந்த புதிதில் சில தவறுகள் செய்தேன் - பூர்ணா

தமிழில் பல படங்களில் நடித்து பலருடைய கவனத்தை பெற்ற நடிகை பூர்ணா, சினிமாவிற்கு வந்த புதிதில் சில தவறுகள் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.
வந்த புதிதில் சில தவறுகள் செய்தேன் - பூர்ணா
Published on

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூர்ணா, கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் பரபரப்பானது. சினிமா அனுபவங்கள் குறித்து பூர்ணா அளித்துள்ள பேட்டியில், பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. வளர்த்துவிட்ட ரசிகர்கள் சொல்லும் நேர்மறை, எதிர்மறை கருத்துகளை ஒரே விதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சில எதிர்மறை கருத்துகளை வைத்து என்னை நான் மாற்றிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் வந்தன. ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்து வரவில்லை. நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும். ஷோபனா, ரேவதி, சுஹாசினி மாதிரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்தேன்.

சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com