

களக்காடு:
களக்காடு நாடார் புதுத்தெருவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதையொட்டி சாக்கு ஓட்டம், ஓட்டப்பந்தயம், கபடி, சைக்கிள் பந்தயம், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதனை தொடர்ந்து 125 கிலோ எடையுள்ள இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தலையின் மீது தூக்கி சுற்றினர். இதேபோல் பண்களுக்கு உரல் தூக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெண்கள் உரலை தூக்கி அசத்தினர். அதன் பின் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.