தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 30-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். மழையை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 29-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் 30-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com