சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on

மதுரை,

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் தொந்தரவு

மதுரையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் புரோட்டா கடை நடத்தி வந்தார். சில வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இந்த நிலையில் அந்த வீடுகளில் ஒரு வீட்டில் இருந்த கணவன்-மனைவி, ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 9 வயதான அந்த சிறுமியை திடீரென ஒருநாள் நாகராஜ் தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டு அவரிடம் இருந்து தப்பினார்.

கைது

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

அரசு தரப்பில் வக்கீல் ஜான்சி ஆஜரானார். விசாரணை முடிவில் நாகராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com