

விழுப்புரம்,
விழுப்புரம் மேல்அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 43). இவருக்கும் வேலூர் மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த டாக்டர் அஜித்குமார் (45) என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இருவரும் வெளிநாடு சென்றுவிட்டனர். பின்னர் அங்கிருந்து ராஜகுமாரி விழுப்புரம் வந்துவிட்டார். இந்நிலையில் அஜித்குமார் அவரது பெற்றோர் மகாவீர்சந்த்கட்டாரியா, கவுசல்யாபாய்கட்டாரியா, சகோதரி ஆர்த்தி ஆகியோர் சேர்ந்து ராஜகுமாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து ராஜகுமாரி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அஜித்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் கூடுதல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோ, குற்றம் சாட்டப்பட்ட மகாவீர்சந்த்கட்டாரியா, கவுசல்யாபாய்கட்டாரியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும், ஆர்த்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.