அரியலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டன

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார்.
அரியலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டன
Published on

தாமரைக்குளம்,

அரியலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 274 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

பணி ஆணை

கூட்டத்தில், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வாங்குடி கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த பரமசிவம் என்பவர் பணியிடையே காலமானதால் அவரது மனைவி ஜெயமேனகா காந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக நியமனம் செய்யப்பட்ட பணி ஆணையும், உடையார்பாளையம் வடவீக்கம் கல்லாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அங்காடி விற்பனையாளராக பணிபுரிந்த பிருந்தாதேவி பணியிலிருக்கும் போதே விபத்தின் மூலம் மரணம் அடைந்ததையொட்டி அவருக்கு சேரவேண்டிய வருங்கால வைப்புநிதி தொகை ரூ.76 ஆயிரத்து 103 மற்றும் ஈட்டிய விடுப்பு மற்றும் பணிக்கால ஊதியமாக ரூ.18 ஆயிரத்து 660 என மொத்தம் ரூ.94 ஆயிரத்து 763-க்கான காசோலையினை அவரது வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

நடவடிக்கை

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற் கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, மண்டல இணைப்பதிவாளர் தயாளன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் செல்வராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com