அய்யலூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை

அய்யலூரில் ஆட்டுச்சந்தை களைகட்டியது.
அய்யலூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை
Published on

வடமதுரை:

அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக வியாபாரிகள் அதிகளவில் வராததால் சரியான விற்பனையின்றி சந்தை களையிழந்து காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கிராமங்களில் அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுவதாலும், ரமலான் மாதம் தொடங்கி விட்டதாலும் இன்றைய ஆட்டுச் சந்தை களைகட்டியது. ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இன்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், செம்மறி ஆடு ரூ.7,000 முதல் ரூ.7,500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு களைகட்டிய சந்தையில், கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

------

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com