செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 162 பேர் பாதிப்பு

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 976-ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 162 பேர் பாதிப்பு
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 162 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 976-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 53 ஆயிரத்து 81 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 807 பேர் உயிரிழந்துள்ளனர். 1,088 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 454- ஆக உயர்ந்துள்ளது. 339 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com