சென்னையில் தொடர் குற்றச்செயல்கள்: குண்டர் தடுப்பு சட்டத்தில் 5 பேர் கைது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தொடர் குற்றச்செயல்கள்: குண்டர் தடுப்பு சட்டத்தில் 5 பேர் கைது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
Published on

சென்னை,

அந்தவகையில் பொத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதிஷ்குமார் (வயது 32), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்த பரத் (24), செங்குன்றம் அலமாதி ஸ்ரீராம் நகரை சேர்ந்த அறுப்பு சீனு (34), அண்ணாநகர் அன்னை சத்யா நகர் 2-வது தெருவை சேர்ந்த ராபர்ட் (22), அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முருகம்பேடு புதிய அருள் நகரை சேர்ந்த கணேஷ்குமார் (29) ஆகிய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com