

மந்தாரக்குப்பம்
மந்தாரக்குப்பத்தை அடுத்த வேப்பங்குறிச்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பள்ளி வளாகத்தில் இருந்த மின் மோட்டாரை திருடியது தெற்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பாரதி(வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை பறிமுதல்செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.