கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5015 பேருக்கு சிறு குறு விவசாயி சான்றிதழ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5015 பேருக்கு சிறு குறு விவசாயி சான்றிதழ் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5015 பேருக்கு சிறு குறு விவசாயி சான்றிதழ்
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரத பிரதமர் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மானிய முறையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு நடப்பாண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கிட கடந்த 28-ந் தேதி அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் சிறு, குறு விவசாயி சான்றிதழ் கேட்டு 6,487 விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இணைய வழியாக பதிவேற்றம் செய்து சின்னசேலம் வட்டத்தில் 1,126 பேர், கள்ளக்குறிச்சி வட்டத்தில் 973 பேர், சங்கராபுரம் வட்டத்தில் 1,391 பேர், திருக்கோவிலூர் வட்டத்தில் 552 பேர், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 700 பேர், கல்வராயன்மலை வட்டத்தில் 273 பேர் ஆக மொத்தம் 5,015 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சரியான விபரம், ஆவணங்கள் இல்லாததால் 1.472 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com