காஞ்சீபுரத்தில் ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

காஞ்சீபுரத்தில் ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரத்தில் ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பிருந்தாவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 58). இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள விராலிமலை. இவர் காஞ்சீபுரம் காந்திரோட்டில் உள்ள சரவணபவன் ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் சின்ன காஞ்சீபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் மேலாளர் பழனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

தற்கொலை செய்து கொண்ட பழனியப்பனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழனியப்பன் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டித்து ஓட்டல் ஊழியர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com