காஞ்சீபுரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், நகரச்செயலாளர் கே.ஆறுமுகம், சேகரன், ராமகிருஷ்ணன், அன்பழகன், முத்துசெல்வம் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப் பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com