மதுரை ஊமச்சிக்குளத்தில், ரவுடி வெட்டிக் கொலை

மதுரை ஊமச்சிக்குளத்தில் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை ஊமச்சிக்குளத்தில், ரவுடி வெட்டிக் கொலை
Published on

மதுரை,

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் டேங்குமார் என்ற குமரன்(வயது 28), பிரபல ரவுடி. இவர் நேற்றிரவு ஊமச்சிக்குளத்தில் உள்ள ஆலத்தூர் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் மற்றொரு காரில் வந்து அவரை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அந்த கும்பல் இறங்கியது.

இதனை பார்த்ததும் குமரன் காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் குமரன் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊமச்சிக்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரனை கொலை செய்தது யார், முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கும்பலையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com