தியாகதுருகத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

தியாகதுருகத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை
தியாகதுருகத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Published on

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி பூங்கொடி. கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர் தனது மகள்கள் திரைசி(வயது 20), லாவண்யா(17), பிரியதர்ஷினி(14) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். இதில் திரைசி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். மற்ற இருவரும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் திரைசிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பூங்கொடி மாப்பிள்ளை பார்த்ததாகவும், ஆனால் இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்த திரைசியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திரைசியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com