நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு தளவாய் சுந்தரம் பங்கேற்பு

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.
நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு தளவாய் சுந்தரம் பங்கேற்பு
Published on

நாகர்கோவில்,

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழா நேற்று மாநிலம் முழுவதும் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தலைமைக்கழக பேச்சாளர் பி.சி.அன்பழகன், நிர்வாகிகள் பொன்.சுந்தர்நாத், பொன்.சேகர், வினிஸ்டன், நீலபெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கு தளவாய்சுந்தரம் பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்பு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com