

நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலன் கருதி அம்மா திட்டம் என்ற திட்டத்தை அறிவித்தார். இந்த திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் கீழ்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.
நெல்லை தாலுகா நெல்லை, ராதாபுரம் தாலுகா அச்சம்பாடு, அம்பை தாலுகா ஜமீன் சிங்கம்பட்டி பகுதி1, நாங்குநேரி தாலுகா பருத்திப்பாடு, சேரன்மாதேவி தாலுகா பாப்பாக்குடி பகுதி1, பாளையங்கோட்டை தாலுகா கிருஷ்ணாபுரம், ராஜகோபாலபுரம்.
மானூர் தாலுகா அழகிய பாண்டியபுரம், சங்கரன்கோவில் தாலுகா பருவக்குடி, திருவேங்கடம் தாலுகா அ.கரிசல்குளம், தென்காசி தாலுகா சில்லரை புரவு, செங்கோட்டை தாலுகா கற்குடி, வீரகேரளம்புதூர் தாலுகா கருவந்தா, ஆலங்குளம் தாலுகா காடுவெட்டி, கிடாரக்குளம், சிவகிரி தாலுகா திருமலாபுரம், கடையநல்லூர் தாலுகா ராமசாமியாபுரம், திசையன்விளை தாலுகா இட்டமொழி.
இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவி தொகை, உழவர் பாதுகாப்பு அட்டைகள், குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கலாம். கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.