என்.டி.ஆர் படத்தில் பாகுபலி வில்லன்

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது.
என்.டி.ஆர் படத்தில் பாகுபலி வில்லன்
Published on

என்.டி.ஆர். என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ராமாராவ் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனுமான பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் இந்தியின் முன்னணி நட்சத்திரமான வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படத்தை கிரிஷ் இயக்குகிறார். ஐதராபாத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டு வந்த இதன் படப்பிடிப்பு தற்போது என்.டி.ஆரின் சொந்த ஊரில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஏற்கனவே காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகள் உள்ளனர். இந்த நிலையில் இதில் ராணா டகுபதியும் இணைந்திருக்கிறார். பாகுபலி திரைப்படத்தில் பல்வாள்தேவனாக வாழ்ந்த ராணா டகுபதி, என்.டி.ஆர். படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம், ஆந்திராவின் தற்போதைய முதல்வரும், என்.டி.ஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com