ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்த வுடன் ஒட்டன்சத்திரத்தில் பல் கலைக்கழகம் அமைக் கப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
Published on

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. கழக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தி.மு.க. வேட்பாளருமான அர.சக்கர பாணி பேசினார். அவர் பேசும்போது கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து என்னை வெற்றி அடைய செய்தீர்கள் நான் உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டு பிள்ளையாகவும், சகோதரனாகவும், குடும்பத்தில் இன்ப துன்பங்களில் பங்கேற்று உங்களின் குறைகளை தொடர்ந்து நிவர்த்தி செய்து வந்துள்ளேன்.

மேலும் 6-வது முறையாக போட்டியிட கழகம் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் மீண்டும் நான் உங்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு எனக்கு மீண்டும் வாய்ப்பளித்து என்னை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்றும், நமது தொகுதியில் விட்டுப்போன பணிகள் எதுவாயிருந்தாலும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்று கழக ஆட்சி மலர்ந்ததும் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி அனைத்துப் பணிகளும் செய்ய காத்திருக் கிறேன். என்னை மீண்டும் வெற்றி அடையச் செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

மேலும் என்னை மாற்று கட்சியினர் 25 ஆண்டு காலமாக தொகுதிக்கு என்ன செய்தார் என்று சொல்லி வருகிறார்கள் அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் நேரில் வந்தால் அவர்களிடம் நான் பட்டியலிட்டு காட்டுகிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேசும்போது, உங்கள் தொகுதிக்கு மிகவும் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து 25 ஆண்டுகள் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் தற்போது 6&வது முறையாக அவரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடையச் செய்வது உறுதி என்றாகிவிட்டது. சக்கரபாணி என்றால் வெற்றி என்று அர்த்தம் ஆகையால் அவருக்கு வெற்றிச்செல்வன் என்று பெயர் சூட்டுகிறேன் என்றார்.

இலவச மின்சாரம் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைந்தால் ரத்து செய்யப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். இங்குள்ள விவசாயிகள் தமிழ்நாட்டை காலி செய்து விட்டு பிற மாநிலங்களுக்கு செல்லக் கூடிய அவலநிலை ஏற்பட்டு விடும். அதனால் நீங்கள் அனைத்து வாக்குகளையும் தவறாமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒட்டன்சத்திரம் தொகுதியை அழகுபடுத்தியவர் சக்கரபாணி தான் என்றார். ஒட்டன்சத்திரம் நகரத்தின் மத்தியில் காந்தி மார்க்கெட் மற்றும் பஸ்நிலையம் இருப்பதால் திண்டுக்கல் பழனி மெயின் ரோட்டில் பெரும் போக்குவரத்து இடையூறு இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரத்தில் புறவழிச்சாலை அமைத்து கொடுத்தார்.

இவர் அரசு கொறடாவாக இருந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் தொகுதிக்கு செய்வதை விட பல எண்ணற்ற திட்டங்களைசெய்துள்ளார். அரசு நிதியிலிருந்து தொகுதிக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிதிகளையும் பெற்று உங்களுக்கு பல்வேறு பணிகளையும் செய்வதில் மிகவும் வலிமையானவர். இவருக்கு நிகர் இவர்தான்.

ஒட்டன்சத்திரம் அருகே கொத்தையம் ஊராட்சியில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மேலும் உங்கள் தொகுதியில் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் கலைக்கல்லூரி அமைத்து தரப்படும் என்றார். ஆகையால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இவரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜ், சுப்பிரமணி, தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகரத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com