பெரம்பலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.32-க்கு விற்பனை

பெரம்பலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெரம்பலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.32-க்கு விற்பனை
Published on

பெரம்பலூர்:

விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை கடந்த அக்டோபர் மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த நிலையில், அதன் பிறகு விலை சற்று குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) இறுதியில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 56 காசுக்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாய் 32 காசுக்கு விற்பனை ஆனது.

வாகன ஓட்டிகள் கவலை

கடந்த 30-ந்தேதி ஒரு லிட்டர் டீசல் 97 ரூபாய் 65 காசுக்கு விற்பனை ஆனது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 98 ரூபாய் 41 காசுக்கு விற்பனை ஆனது.

ஆனால் நேற்று பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டர் 110 ரூபாய் 77 காசுக்கு விற்பனையானது. பெட்ரோல்-டீசல் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com