ராயபுரத்தில் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை ராயபுரம் சூரிய நாராயண சாலையில் நேற்று மாலை திடீரென்று சுமார் 10 அடியில் பள்ளம் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் செல்லும் வழியில் இந்த பள்ளம் ஏற்பட்டது.
ராயபுரத்தில் சாலையில் திடீர் பள்ளம்
Published on

திருவொற்றியூர்,

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாதா கோவில் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் விழுந்த பள்ளத்தை மூடுவது தொடர்பான பணிகளை மேற்கொண்டனர். பொக்லைன் எந்திரம் மூலமாக பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தை தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com