சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி - 49 பேருக்கு தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி - 49 பேருக்கு தொற்று உறுதி
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 32 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 23 பேர், மேட்டூரில் 4 பேர், அயோத்தியாப்பட்டணம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், மகுடஞ்சாவடி, ஓமலூர், வீரபாண்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, எடப்பாடி, மேச்சேரி, சேலம் ஒன்றியம், தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 79 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பலியானார். இதேபோல் சேலத்தை சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com