சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் - 2 பெண்கள் தற்கொலை

சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் - 2 பெண்கள் தற்கொலை
Published on

சேலம்,

சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி கமலா(வயது 55). இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் முழுமையாக குணமாகவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்த நிலையில் கமலா மயங்கி கிடந்தார்.

பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கமலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அழகாபுரம் வன்னியர் நகரை சேர்ந்தவர் பசுபதிநாத். இவருடைய மனைவி சுப்ரஜாதேவி(36). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுப்ரஜாதேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com