வடக்கனந்தல் பேரூராட்சி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

வடக்கனந்தல் பேரூராட்சி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
வடக்கனந்தல் பேரூராட்சி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
Published on

கச்சிராயப்பாளையம்

வடக்கனந்தல் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கல்வராயன்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா, மண்டல தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையில் 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கச்சிராயப்பாளையம்- கள்ளக்குறிச்சி சாலை, சின்னசேலம் சாலை, கல்வராயன்மலை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், பரிசுபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதேபோல் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ஏழுமலை, மியாட் மனோ மற்றும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com