மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை கல்லறையில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார்

திங்கள்சந்தை அருகே மகள் இறந்த துக்கத்தில் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை கல்லறையில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார்
Published on

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே கண்டன்விளை பள்ளிச்சல்விளையை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45), தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர். மகள் கடந்த ஆண்டு இறந்தார். அதன்பின்பு தங்கவேல் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த சில நாட்களாக யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.

பிணமாக கிடந்தார்

அப்போது, வீட்டின் அருகே மகளின் கல்லறையில் தங்கவேல் பிணமாக கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com