கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 14 ஆயிரத்தை தாண்டியது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 14 ஆயிரத்தை தாண்டியது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 14 ஆயிரத்தை தாண்டியது
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 13 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரத்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலன் இன்றி 118 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் தொற்று பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 560 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 158 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 952 லிருந்து 14 ஆயிரத்து 110-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com