மாவட்டத்தில், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது - 2 முதியவர்கள் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள்.
மாவட்டத்தில், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது - 2 முதியவர்கள் பலி
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 56 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 38 பேர், மேட்டூரில் 9 பேர், கொளத்தூரில் 8 பேர், நங்கவள்ளி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், சங்ககிரியில் 5 பேர், ஆத்தூரில் 4 பேர், மேச்சேரி, சேலம் ஒன்றியம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், காடையாம்பட்டி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், எடப்பாடி, மகுடஞ்சாவடி, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 6 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த 66 வயதுடைய மற்றும் 82 வயதுடைய முதியவர்கள் 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரிகளில் பலியானார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com