கள்ளக்குறிச்சியில் பெட்ரோல் ஊற்றி பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் பெட்ரோல் ஊற்றி பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சியில் பெட்ரோல் ஊற்றி பெண் தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கரியப்ப நகரை சோந்தவர் கோதண்டராமன் மனைவி கலைச்செல்வி(வயது 34). இவர் சம்பவத்தன்று தனது கணவரிடம் வீரசோழபுரம் செல்வதாக கூறிவிட்டு கோட்டைமேடு அய்யனார் கோவில் அருகில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சல் எழுப்பினார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கலைச்செல்வியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார். வயிற்று வலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com