குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மத்துபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சவுந்தர்யாவுக்கும் (வயது25), பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த நிஷாந்துராஜ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் விஷ்வந்த்ராஜ் என்ற மகன் இருக்கிறான். நிஷாந்துராஜ் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் அவர் மனைவி, மகனுடன் கோவையில் குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் சவுந்தர்யா கோபித்துக்கொண்டு கடந்த 11-ந்தேதி தர்மத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கினார்.

இதனிடைய மனவருத்தம் அடைந்த சவுந்தர்யா நேற்று முன்தினம் மாலை வீட்டின் மாடியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சவுந்தர்யாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com